சென்னை: தெற்கு ரயில்வேயில் முதல் தனியார் ரயில் இயக்கப்படுவது தொடர்பான உத்தரவைப் திரும்ப பெற வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
ஜூன் 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வே அனுமதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த எம்என்சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதனை இயக்கவுள்ளது. இது தொடர்பாக சம்பந்தபட்ட நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ரயில் இயக்கம் தொடர்பாக உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "தெற்கு ரயில்வேயில் முதல் தனியார் ரயில் கோவையிலிருந்து சீரடிக்கு! ரயில்வே அமைச்சர் சென்னையில் பேசியது அத்தனையும் பொய்யா?
» கருமுட்டை விற்பனை விவகாரம்: மத்திய அரசின் சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு நடவடிக்கை
» கோவையில் ரூ.230 கோடியில் 2 மேம்பாலங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரயில்வே நிர்வாகமே உத்தரவை திரும்பப் பெறு. ரயில்வே மக்களின் சொத்து. உங்களின் சொத்தல்ல, யாருக்கும் தாரைவார்க்க. முதல் பயணத்திலே பக்தர்களுக்கு மூன்று மடங்கு கட்டணம்.
உங்களுக்கு இருப்பது ஆன்மிகத்தின் பக்தியுமல்ல, தேச பக்தியுமல்ல... தனியார் பக்தி மட்டும்தான்" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago