எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நாளை வழங்கப்படுகிறது.
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிந்தது. தனித்தேர்வர்கள் உள்பட 11 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு மே 23-ம் தேதி வெளியானது. அன்றைய தினமே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் நாளை (வியாழக்கிழமை) வழங்கப்படுகிறது.வேலைவாய்ப்புக்காக 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவுசெய்ய பள்ளியிலேயே ஆன்லைன் வசதிக்கும் பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. சான்றிதழ் வாங்க வரும் மாணவ, மாணவிகள் இருப்பிட முகவரிக்காக ரேஷன் அட்டை கொண்டுவருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago