தமிழ்நாட்டில் ஓராண்டில் 3428 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 3428 குழந்தை தொழிலாளர்கள் மீட்டு பள்ளிக்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கணேசன், அரசுப்பள்ளி மாணவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர் .

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்காக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வறுமையின் காரணமாகவே குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுகின்றனர். ஹோட்டல் போன்ற இடங்களில் குறைவான சம்பளத்தில் ஆட்கள் தேவை என குழந்தைகளை பயன்படுத்துகின்றனர்.
பெரியவர்களுக்கு 700 ரூபாய்க்கு மேல் சம்பளம் தரவேண்டும் என்பதால் , 150 ரூபாய்க்கு சிறுவர்களை பணியமர்த்துகின்றனர்.

கடந்த ஓராண்டில் மட்டும் 3428 குழந்தை தொழிலாளர்கள் மீட்டு, பள்ளிக்கு அனுப்பட்டுள்ளனர். இதுவரை 33504 ஆய்வுகள் மேற்கொண்டு 138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

அரசு பள்ளிகளில் சத்துணவின் போது ஒரு வாரத்திற்கு 5 முட்டை, ஒரு ஆண்டுக்கு 240 முட்டை என சராசரியாக 2800 முட்டை வரை படிக்கும் காலத்தில் ஒரு பள்ளி மாணவர் உண்கிறார். இதற்கு காரணம் அரசு கொண்டு வந்த சத்துணவில் முட்டை வழங்கும் திட்டமே. அரசுப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும் தற்போது அரசு கொண்டு வந்துள்ளது. குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே அரசின் இலக்கு , இதற்காக பல்வேறு குழுக்கள் அமைத்து மாவட்ட அளவில் கண்கானிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது" இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்