மதுரை: மணல் அளவீட்டு முறையை மாற்றக் கோரிய வழக்கில் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
திருச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''தமிழகத்தில் மணல் யூனிட் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு யூனிட்டிற்கு ரூ.1000 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அளவீடு தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு இல்லை. சட்ட அளவியல் விதிப்படி மணல், கிராவல் மண், கிரானைட் போன்றவை முறையான தர நிர்ணயம் செய்யப்பட்ட எடை அல்லது அளவீட்டு முறையில் விற்பனை செய்யப்பட வேண்டும்.
தற்போதைய அளவீட்டு முறையால் அரசுக்கு அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு முறைகேடுகளும் நடைபெறுகின்றன. எனவே மணல் விற்பனை அளவீட்டு முறையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் பலனில்லை. எனவே, மணல் விற்பனைக்கு தர நிர்ணய அளவீட்டு முறையை உருவாக்கி, அந்த அளவீட்டு முறை அடிப்படையில் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''ஒரு யூனிட்டுக்கு என விலை நிர்ணயம் செய்யப்பட்டு மணல் விற்பனை நடைபெறுகிறது. ஒரு யூனிட் என்பது 2.83 கன மீட்டர் என அளவீடு செயயப்பட்டு மணல் விற்பனை நடைபெறுகிறது'' என்றார்.
» திருச்சி பெரியகடை வீதி பகுதியில் மூச்சுமுட்டும் போக்குவரத்து நெரிசல்: நடவடிக்கை எப்போது?
இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago