சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் ரூ.8 கோடியில் சீரமைப்பு பணிகள்: முன்னேற்பாடுகள் குறித்து விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை

By செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சியில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதையொட்டி மாமல்லபுரத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வரும் ஜூலை 28-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஸ் போட்டிகளின் பெருமையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பார்க்கப்படுகின்றன.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளிலிருந்து இரண்டாயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.1927-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இதுவரை ஒருமுறை கூட இந்தியாவில் நடைபெற்றதில்லை.

பல்வேறு நாடுகளின் போட்டிகளுக்கு இடையே இந்தியா முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.102 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற வுள்ளதால் பல்வேறு துறைகள் சார்பில் புனரமைப்பு பணிகள் மூலம் மாமல்லபுரத்தை அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி மாமல்லபுரம் பேரூராட்சியை ரூ. 7 கோடியே 90 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மூலம் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி பேரூராட்சியில் பழுதடைந்த சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள், பவர் பிளாக் சாலைகள் பவர் பிளாக் நடைபாதைகள் அமைப்பது, மேலும் பொய்கைக் குளம் சீரமைத்தல் தேவனேரி - ஈசிஆர் சந்திப்பில் பூங்கா அமைத்தல், ஈசிஆர் - கோவளம் சந்திப்பில் சாலையோர பூங்கா, கடற்கரை அருகில் திருவள்ளூர் சிலை பூங்கா மேம்பாடு செய்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.

அதேபோல் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிய 15 இடங்களில் நூறு குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவுள்ளன. கழிப்பறை வசதி ஏற்படுத்தவும், 10 இடங்களில் தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து தெருக்களுக்கும் தெரு பெயர் பலகை வைத்தல், நகரம் முழுவதும் உள்ள அனைத்து சாலையிலும் பக்கவாட்டு சுவர்களில் உள்ள விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை அப்புறப்படுத்தி, வர்ணம் அடித்து வாசகம் மற்றும் ஓவியம் வரையவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி பகுதியில் உள்ள 5 பேருந்து நிழற்குடைகள் மேம்பாடு செய்யப்படவுள்ளன.

பல்வேறு தெருக்களில் எல்இடி விளக்கு அமைத்தல், மின் கம்பங்களுக்கு பெயிண்ட் அடித்து அழகுபடுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆலோசனைக் கூட்டம்

இதனிடேயே தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட செஸ் ஒலிம்பியாட் மருத்துவம் மற்றும் சுகாதார குழுத் தலைவரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு அலுவலருமான அரசு முதன்மைச் செயலாளர் பி.செந்தில் குமார் தலைமையில், மருத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக, தங்கும் விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து தங்கும் விடுதி, உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநருமான உமா, மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்