சென்னை: தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவுகட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தேவை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் தளத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் கூறியுள்ளதாவது: ''கரூர் மாவட்டம் தாந்தோனிமலையைச் சேர்ந்த சஞ்சய் என்ற 23 வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் தினமும் நடக்கும் நிகழ்வுகளாக மாறி வருகின்றன. சென்னையில் பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதற்கு அடுத்த நாளே கரூர் மாவட்டத்தில் அடுத்த தற்கொலை நிகழ்ந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பிந்தைய 10 மாதங்களில் நடக்கும் 23-ஆவது தற்கொலை இதுவாகும். இது தொடர்கதையாக அனுமதிக்கக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago