2022-23-ம் ஆண்டு ரயில்வே திட்டங்களுக்கு தமிழகத்துக்கு ரூ.3,865 கோடி ஒதுக்கீடு - 1,664 கி.மீ. ரயில் பாதை மின்மயமாக்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: ரயில்வே திட்டங்களுக்காக 2022-23-ம் நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,865 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரட்டை ரயில் பாதை, 3-வது ரயில் பாதை, அகலப்பாதை அமைத்தல் மற்றும் மின்மயமாக்கல் போன்ற பல்வேறு ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக, 2022-23 நிதியாண்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வருடாந்திர பட்ஜெட் செலவாக ரூ.3,865 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2014-15 நிதியாண்டின் வருடாந்திர செலவினத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

67 சதவீதம் செலவினம் அதிகரிப்பு

கடந்த 8 ஆண்டுகளுக்கான, அதாவது, 2014 முதல் 2022 வரையிலான சராசரி செலவீனத்துடன் ஒப்பிடும்போது, ​​நடப்பு நிதியாண்டின் செலவினம் 67 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் பழநி - பாலக்காடு, செங்கோட்டை - புதிய ஆரியங்காவு, பொள்ளாச்சி - போத்தனூர், திருவாரூர் - காரைக்குடி, மதுரை - தேனி ஆகிய ஊர்களுக்கு இடையே 400 கி.மீ. மீட்டர்கேஜ் ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

15 ரயில் நிலையங்களில்...

இதேபோல, கல்லக்குடி - அரியலூர், செங்கல்பட்டு - மதுராந்தகம், தொழுப்பேடு - பேரணி, ஓமலூர் - மேட்டூர் அணை, தாம்பரம் - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - பேசின் பிரிட்ஜ் சந்திப்பு உள்பட 15 ரயில் நிலையங்களுக்கு இடையே 639.22 கி.மீ. தூரத்துக்கு 2, 3 மற்றும் 4 வது ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 1,664 கி.மீ. தூர ரயில் பாதை கடந்த 8 ஆண்டுகளில் முழுவதுமாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. இத்தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்