காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்துக்கு 8 மாதங்களுக்கு மேலாகியும் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாதது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சேது. சுடலைமுத்துவின் பதவிக் காலம் கடந்த 2013 செப்டம்பர் 26-ல் முடி வடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய துணைவேந்தரை நியமிக்க தேடல் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக சென் னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன், தமிழக அரசு சார்பு பிரதிநிதியாக தமிழ் நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் திருமலைச் சாமி, சிண்டிகேட் சார்பு பிரதிநிதி களாக மதுரை காமராசர் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ஆளுடைய பிள்ளை, மதுரை தியாகராஜா கல்விக் குழுமங்களின் தலைவர் கருமுத்து. கண்ணன், செனட் சார்பு பிரதிநிதியாக காந்திகிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஓஷா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
புதிய துணைவேந்தரை யு.ஜி.சி. விதிகளின் படி ஒளிவு மறைவின்றி வெளிப்படைத் தன்மையோடு பரிந் துரைக்க வேண்டும் என்பதற்காக தேடல் குழு பலமுறை சென்னை யில் கூடி ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில், லோக்சபா தேர் தல் தேதி அறிவிக்கப்பட்டதாலும் துணை வேந்தர்கள் நியமனங்கள் குறித்து காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்ததாலும் புதிய துணை வேந் தரை தேர்ந்தெடுப்பதில் காலதாம தம் ஏற்பட்டது. தற்போது, வழக்கு நடைமுறைகள் முடிவடைந்து விட்டதால், ஜூன் 9-ம் தேதி, தேடல் குழு மீண்டும் கூடுவதாக அறிவிக் கப்பட்டது. ஆனால், அந்தத் தேதி யும் ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 17-ல் கூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி 17-ம் தேதி கூடிய தேடல் குழுவினர், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்காமல் கூட்டத்தை ஒத்திவைத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அழகப்பா பல்கலை, வட்டாரத்திலிருந்து ‘தி இந்து’-விடம் பேசியவர்கள் கூறியதாவது: ‘துணைவேந்தர் தேடல் குழுவினர் யு.ஜி.சி. விதிக ளின்படி தகுதியான 3 நபர்களை கவர்னருக்கு பரிந்துரை செய்ய முடிவெடுத்தார்கள். ஆனால், அந்தப் பட்டியலில் தாங்கள் பரிந்துரைக்கும் ஓரிருவரையும் சேர்க்க வேண்டும் என அதிகார மட்டத்திலிருந்து அழுத்தம் கொடுத் திருக்கிறார்கள். உடனடியாக இதில் எதையும் செய்ய முடியாத தால் எந்த முடிவையும் எடுக்காமல் கூட்டத்தை ஒத்தி வைத்திருக் கிறார்கள். அத்துடன், மதுரை பல் கலைக்கழக துணைவேந்தராக இருக்கும் கல்யாணியின் நிய மனத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கில் விசாரணை முடிந்து விரை வில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இந்தத் தீர்ப்பைப் பொறுத்து அழகப்பா பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தரை நியமனம் செய்யலாம் என அரசு தரப்பில் முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, அழகப்பா பல் கலை துணைவேந்தர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஒருவரின் மகனும் அண்மையில் முதல்வரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். சேலம் பெரியார் பல்கலையில் துணைவேந்தர் பதவிக்கு போட்டிப் போட்டு கிடைக்காதவர்கள் தற்போது அழகப்பா பல்கலை துணைவேந்தராக வருவதற்கும் முயற்சி செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago