திருப்பூர் | குடிபோதை மறுவாழ்வு மைய மாடியில் இருந்து குதித்து இளைஞர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர்: நாமக்கல் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (24). இவர், திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் வசித்து வந்தார்.

குடிபோதைக்கு அடிமையான கார்த்திக்கை, அதே பகுதியிலுள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அந்த கட்டிட மாடியில் இருந்து கீழே குதித்தார்.

படுகாயமடைந்த கார்த்திக், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மறுவாழ்வு மைய உரிமையாளர் கேசவன் அளித்த புகாரின்பேரில், நல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்