கரூர்: கரூர் மாவட்டத்தில் தங்கத் தந்தை திட்டத்தின் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை (வாசெக்டமி) சிகிச்சை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூன் 10-ம் தேதியும், குளித்தலை அரசு மருத்துவமனையில் ஜூன் 24-ம் தேதியும் இந்த முகாம் நடைபெறவுள்ளது. குடும்பநல கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்.
மேலும், கூடுதலாக தகுதியின் அடிப்படையில் இலவச வீட்டுமனை, வீட்டில் உள்ள முதியவர்களுக்கு உதவித் தொகை, சிறு, குறு, நடுத்தர தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000 மதிப்பில் உபகரணங்கள், இலவசமாக கால்நடை கொட்டகை, சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்துடன் நுண்ணீர் பாசனம் போன்ற திட்டங்களில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்.
எனவே, தகுதியுள்ள ஆண்கள், இந்த முகாம் தொடர்பாக 94439 42304, 99445 23334, 94439 04031 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago