சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட செலிவியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015-ம் ஆண்டில் இருந்து 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் செவிலியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒன்று கூடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட செவிலியர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
» கோவை | ‘இன்டெக் 2022’ கண்காட்சியில் ரூ.1200 கோடிக்கு வர்த்தகம்
» “அண்ணாமலை தவறான தகவல்களை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி வருகிறார்” - அமைச்சர் ஆவடி நாசர்
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, "கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அரசு நடத்தக் கூடிய தேர்வில் வெற்றி பெற்றும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, எங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும். காவல் துறையினர் எங்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
Loading...
அரசு சொல்வது என்ன?
இந்தப் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், " எம்ஆர்பி செவிலியர்கள் போராட்டம் நடத்துவது தவறல்ல. பணி நிரந்தரம் செய்வது குறித்து தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான வழிமுறைகளை சுகாதாரத் துறை தொடர்ந்து பரிசீலித்து வருகிறது.
தேவைப்பட்டால் எம்ஆர்பி செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூட சுகாதாரத்துறை தயாராக உள்ளது. செவிலியர் சங்கங்கள் ஒன்பதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. ஒரு சில சங்கங்கள் செவிலியர்களை போராட்டத்திற்கு தூண்டிவிடுகின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago