தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திருவள்ளூர் புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

By செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜும் திருவள்ளூர் எஸ்பியாக பகேர்லா செபாஸ் கல்யாணும் நேற்று பொறுப்பேற்றனர்.

தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி பணி ஓய்வைத் தொடர்ந்து தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக இருந்த அமல்ராஜ் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, நேற்று ஆணையரக அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றார். முன்னதாக அவருக்கு காவலர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர்.

இதேபோல் மத்திய அரசு பணியிலிருந்து திரும்பி காத்திருப்போர் பட்டியலில் இருந்த பகேர்லா செபாஸ் கல்யாண் திருவள்ளூரின் புதிய காவல் கண்காணிப்பாளராக நேற்று பொறுப்பேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்த அவருக்கு காவல் துறையினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அவர் முறைப்படி பொறுப்பேற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்