சென்னை: “ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தயக்கம் ஏன்?” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் சென்னை இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் குறிப்பிட்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தயக்கம் ஏன் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் "சென்னையில் இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஓர் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது.
காவல்துறை டிஜிபியே ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரைக் கொல்லலாம், என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும் கூட, இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
» கடலூரில் ஆற்றில் முழ்கி 7 பேர் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்
» ஆப்பிளையும், எலுமிச்சையையும் ஒப்பிடுவது போன்றது அண்ணாமலையின் குற்றச்சாட்டு: சுகாதாரத்துறை விளக்கம்
யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? இன்னும் எத்தனை உயிர்களை தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்?" - இவ்வாறு அந்தப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago