சென்னை: ஆவினில் வாங்கவேண்டியதை தான் வாங்க முடியும் என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு ஆப்பிளையும் எலுமிச்சை பழத்தையும் ஒப்பிடுவது போன்று உள்ளது என்றும் சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டள்ளது.
சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 13லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களுடன் கூடிய கண் பரிசோதனை மையம் மற்றும் ரூபாய் 18லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட நவீன அறுவை அரங்கை சுகாதாரத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையின் நுழைவு வாயிலில் புதிய எல்இடி தகவல் பலகையை அமைச்சர் திறந்து வைத்து, கருவிழி தானம் பெறும் மையத்தையும், ரூ.13 லட்சம் மதிப்பில் புதிய லேசர் சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அறுவை அரங்கை திறந்து வைத்தார்.
பின்னர், அமைச்சர், செயலர், இயக்குநர், மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் இவர்கள் பேசுகையில், " கர்பிணி தய்மார்களுக்கான ஊட்டச்சத்து பவுடர் டென்டர் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். அவரது குற்றச்சாட்டிற்கு, சுகாதாரத்துறை தரப்பில் விரிவான பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் கர்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் திட்டம் 2018ல் தொடங்கப்பட்டது. இதில் 18 ஆயிரம் ரூபாய் கர்பிணிகளுக்கு தரப்படும். அந்த நிதி முழுமையாக அவர்களின் உடல் நலம் சார்ந்து பயனடுத்துவதில்லை என்பதால், அரசே அவர்களுக்கு 10% தொகைக்கு தேவையான பொருட்களை வாங்கி தருகிறது. ஐசிஎம்ஆர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைகள் படி, கர்பிணிகளுக்கு பேறு காலத்தில் என்ன ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என தீர்மானின்கப்படுகிறது.
» தமிழகத்தில் தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
அதன் அடிப்படையில் PRO PL என்ற health mix டெண்டர் விடப்பட்டு, 2018ம் ஆண்டு முதல் கர்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் சந்தை விலை ரூ.588. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அதை ரூ.460.50 க்கு வாங்கியது. இதன் மூலம் 127.50 ரூபாய் சந்தை விலையிலிருந்து குறைவாக வாங்கப்பட்டுள்ளது.
அயன் சிரப் சந்தை விலை ரூ.112 ஆகும். அதை ரூ 74.60 க்கு அரசு வாங்கியுள்ளது. இதன் மூலம் ரூ.37.40 அரசுக்கு மிச்சமாகியுள்ளது. 2018ம் ஆண்டு டெண்டர் திறக்கப்பட்டது. 2019ம் ஆண்டு முதல் PROPL வாங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 500 கிராம் எடை கொண்ட 17,65,560 பாட்டில்கள் வாங்கப்பட்டன. டெண்டர் முடிந்ததன் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி மீண்டும் டெண்டர் திறக்கப்பட்டது. இதற்கான நிபந்தனைகள் எதுவும் மாற்றப்படவில்லை.
டெண்டர் திறக்கப்பட்ட பிறகு , மாநில திட்ட ஆணையம், இந்த சத்துமாவை ஆவினிடமிருந்து பெறலாமே என கருத்து தெரிவித்தது. இந்த கருத்து குறித்து விவாதித்து முடிவு செய்ய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஊட்டச்சத்து நிபுணர்கள், ஆவின் நிர்வாக இயக்குநர் அந்த குழுவில் இருந்தனர். கர்பிணி பெண்களுக்கு தேவையான 32 சத்துகள் கொண்ட மாவு தேவை என ஆவினிடம் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையான சத்து மாவு இருந்தால் அதை உரிய ஆய்வகத்தில் பரிசோதித்து அந்த அறிக்கையை தருமாறு ஆவினிடம் கூறப்பட்டுள்ளது.
ஆவின் இது குறித்து இது வரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆவினில் தற்போது இருப்பது milk whitener. இது டீ காபி போட தான் பயன்படும். இந்த ஆண்டுக்கான டெண்டர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. யாரிடமிருந்து என்ன விலையில் வாங்க போகிறோம் என தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் தொழில்நுட்ப குழு முடிவு செய்யவில்லை. அதற்குள்ளாக குற்றச்சாடடு வைப்பது, இன்னாருக்கு கொடுக்கப்படுமோ என்ற ஏசியம் அல்லது இன்னாருக்கு கொடுக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பு.
கடந்த 2 ஆண்டுகளில் பேரிடர் காலம் என்பதால் இந்த பொருட்கள் எதுவும் கொள்முதல் செய்யவில்லை. எனவே சுமார் 450 கோடி அரசிடமே மீண்டும் அளிக்கப்பட்டது. விலை குறைவாக உள்ளது என்பதற்காக ஆவினில் வாங்க முடியாது எனவும், ஆப்பிளையும் - எலுமிச்சையையும் ஒப்பிடுவது போன்ற குற்றச்சாட்டாக உள்ளது" இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago