சென்னை: கர முட்டை விற்பனை தொடர்பான வழக்கை விசாரணைக்க மாநில காவல்துறைக்கு திமுக அரசு முழு சுதந்திரம் வழங்கும் என நம்புகிறோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பிரபல கருத்தரிப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கருமுட்டை தானம் செய்வது போல் நடித்து, பணத்திற்கு விற்பனை செய்த மாலதி மற்றும் சிறுமியின் தாய் சுமையா, சுமையாவின் இரண்டாவது கணவர் சையத் அலி ஆகிய 3 பேரை கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோடு சூரம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க மாநில காவல்துறைக்கு திமுக அரசு முழு சுதந்திரம் வழங்கும் என நம்புகிறோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்த ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் "16 வயது சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கருவுற்ற பிறகு கருமுட்டைகளை 8 முறை விற்றுக் காசாக்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதற்குக் காரணமான பின்னிலிருந்து இயக்கி வரும் சதிகார கும்பலைக் கண்டறியவேண்டும்.
» கெடிலம் | “இறந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் மட்டும் போதாது... விசாரணை தேவை” - அண்ணாமலை
» ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை; தமிழக அரசு நிலையை தெளிவுபடுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் தாயின் இரண்டாம் கணவர், இடைத்தரகர் ஆகியவர்களுக்கு எதிராக போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் பற்றியும் விசாரிக்க வேண்டும்
இந்த வழக்கை விசாரித்து 16 வயது சிறுமிக்கு நீதி வழங்க மாநில காவல்துறைக்கு திமுக அரசு முழு சுதந்திரம் வழங்கும் என நம்புகிறோம்" என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago