கெடிலம் | “இறந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் மட்டும் போதாது... விசாரணை தேவை” - அண்ணாமலை

By செய்திப்பிரிவு

சென்னை: “கெடிலம் ஆற்றில் மணல் எடுத்தது தொடர்பாக விசாரித்து நடவடிக்கையை எடுக்க வேண்டும்” பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த ஏ.குச்சிப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், கெடிலம் ஆற்றில் மணல் எடுத்தது தொடர்பாக விசாரித்து நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுப்ப பதிவில், "கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மணல் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீர் என்று தெரியாது குளிக்கச் சென்ற சிறுமிகள் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள செய்தி சோகத்தை அளிக்கிறது. அவர்களை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு பாஜகவின் ஆழ்ந்த இரங்கல்கள். அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.

இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் மட்டும் கொடுத்துவிட்டுக் கடந்த செல்லாமல், மணல் எடுத்தவர் யார், உரிமம் பெற்றிருந்தாரா என்பதனை விசாரித்த தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்!" என்று தெரிவித்துள்ளர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்