தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறும் திமுக அரசு: அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து

By செய்திப்பிரிவு

மானாமதுரை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு திணறுகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடமும் அவர் கூறியதாவது:

அதிமுக எதிர்பார்ப்பு இல்லாத உண்மையான தொண்டர்களால் வளர்க்கப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தை பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சீரழித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மீண்டும் ஜெயல லிதா ஆட்சி அமைய அமமுகவினர் உழைக்க வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மக்க ளுக்கு கொடுத்த வாக்குறுதி களை நிறை வேற்ற முடியாமல் திமுக அரசு திணறி வருகிறது. பிரதமர் பங்கேற்கும் கூட்டங்களில் தமிழகத்துக்கான திட்டங்களை கேட்டுப் பெற வேண்டும். அதை விட்டுவிட்டு வரம்பு மீறி பேசுவது முதல்வருக்கு அழகல்ல. மக்களைப் பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து அமமுக போராட்டங்களை நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டச்செயலாளர் தேர்போகி பாண்டி, வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் குரு.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்