இலங்கை தமிழர்களுக்கான உதவிகள்: மத்திய அமைச்சருடன் ஆளுநர் தமிழிசை ஆலோசனை

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: இலங்கை தமிழர்களுக்கான உதவிகள் குறித்து மத்திய அமைச்சருடன் ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தினார்.

மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்துவருகிறார். இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கான உதவிகள் குறித்து மத்திய அமைச்சருடன் ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசாங்க திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான பல்வேறு ஆலோசனை கூட்டங்களையும் நடத்தியதற்கு மத்திய அமைச்சருக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது வெளியுறவுத்துறை சார்பில் இலங்கை தமிழர்களுக்கான உதவிகள் பற்றியும், புதுச்சேரியில் நலிவடைந்த கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவது பற்றியும் மற்றும் பல மத்திய அரசு சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவது பற்றியும் புதிய திட்டங்கள் கொண்டு வருவது பற்றியும் விவாதித்தார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தமிழக மக்களின் உணர்வுகளோடு ஒன்றிய தமிழக புராதன சிலைகளை மீட்டெடுத்து ஒப்படைத்ததற்கு மத்திய இணை அமைச்சர் வாயிலாக பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.

அப்போது மத்திய இணை அமைச்சர் மத்திய அரசு, தமிழக புராதன சிலைகளை மீட்க எவ்வளவு கடுமையான முயற்சிகள் மேற்கொண்டது என்பது பற்றியும், சிலைகளை டெல்லியில் ஒப்படைக்கும் போது தமிழக மக்களுக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உதவ முடிந்ததே என்ற உணர்வை மகிழ்ச்சியோடு ஆளுநர் பகிர்ந்து கொண்டார்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்