சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,420 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 115.10 அடியாக சரிந்தது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கோடை மழை காரணமாக மே மாதத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது, மழை குறைந்து நீர்வரத்து குறைந்து வருகிறது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 3,599 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 3,420 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பகுதிகளின் குறுவை சாகுபடிக்காக விநாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 115.38 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 115.10 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 85.86 டிஎம்சி-யாக உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago