ராமநாதபுரம்: உலகின் தட்பவெப்பநிலை, பூகம்பம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை துல்லியமாகக் கண்டறியும் வகையில் இஸ்ரோ, நாசா ஆகியவை இணைந்து நிஷார் என்ற செயற்கைக்கோளை உருவாக்கி வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்.
ராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டுக்கு, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நேற்று வருகை தந்தார். அப்துல் கலாமின் உறவினர்களை அவர் சந்தித்து பேசினார்.
அப்போது அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம், கலாமின் அண்ணன் மகள் நஸீமா மரைக்காயர் ஆகியோர் அவரை வரவேற்று நூல் வழங்கினர். பின்னர் கலாமின் இல்லத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு சிவன் பதிலளித்து கலந்துரையாடினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (இஸ்ரோவும்), நாசாவும் சேர்ந்து நிஷார் (என்ஐஎஸ்ஏஆர்) என்ற செயற்கைக்கோளை உருவாக்கி வருகின்றன. இந்த செயற்கைக்கோள் இந்தியாவில் இருந்து ஏவப்படும்.
அது ஏவப்பட்ட பிறகு உலகத்தில் உள்ள தட்பவெப்ப நிலை, பூகம்பம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிய முடியும். மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில், ககன்யான் விண்கலம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. முதன் முதலில் மனிதர்கள் இல்லாமல் இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பின்னர் மனிதர்கள் அனுப்பப்பட உள்ளனர்.
குலசேகரப்பட்டினம் ஏவுதளம்
குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைய உள்ளதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக 2,200 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக இஸ்ரோ கேட்டதை அடுத்து முதல் கட்டமாக 1,850 ஏக்கர் இடத்தை தமிழக அரசு கையகப்படுத்திக் கொடுத்துள்ளது. முழுமையாக இடங்கள் கையகப்படுத்திய பிறகு அங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் எனக் கூறினார். முன்னதாக அவர் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago