சென்னை: சென்னையில் ஒரு சில சாலைகளின் நுழைவு வாயிலில் குடியிருப்புவாசிகள் இணைந்து செக் போஸ்ட் அமைத்துள்ளனர். எங்கே போகிறோம் என்பதைக் கூறினால் மட்டுமே இந்தத் தெருக்களில் அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகள் என்று பிரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பேருந்து சாலைகளில் நிழற்குடைகள் அமைப்பது, அழகுபடுத்தவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. உட்புற சாலைகளில் மரங்கள் நடுவது, தூய்மைப் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சென்னை மாநகராட்சிதான் செய்கிறது.
இவ்வாறு சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சாலைகளில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், சென்னை மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால், சென்னை மாநகராட்சிகளில் ஒரு சில சாலைகளில் உரிய அனுமதி பெறாமல் ‘செக் போஸ்ட்’ அமைத்துள்ளனர் குடியிருப்புவாசிகள்.
» மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தினசரி அறிக்கை: சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவு
குறிப்பாக, ‘எங்கே போகிறோம்’ என்பதை கூறினால் மட்டுமே சாலைகளுக்கு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் சாலையில், கங்காதீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் காந்தி அவென்யூ என்ற தெரு உள்ளது. இந்தத் தெருவின் நுழைவு வாயிலில் அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் இணைந்து ‘செக் போஸ்ட்’ அமைத்துள்ளனர். மேலும், காவலாளி ஒருவரையும் பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
இந்தத் தெருவில் வசிப்பவர்களைத் தவிர்த்து வேறு யாராவது இந்தத் தெருவுக்குள் வந்தால், ‘யார் வீட்டுக்கு சொல்கிறோம்’ என்பதை அந்தக் காவலாளியிடம் கூறினால்தான் உள்ளே அனுமதிக்கின்றனர்.
இதைப்போன்று ஈ.வெ.ரா பெரியார் சாலையில் நேரு பூங்கா சிக்னல், கே.ஜெ மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஈ.வெ.ரா 2-வது சந்திலும் செக்ஸ்ட் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து சைதாப்பேட்டை வேளாங்கண்ணி கல்லூரி செல்லும் சாலை ஆகிய இடங்களில் இதுபோன்று குடியிருப்புவாசிகள் சாலையின் நுழைவு வாயிலில் செக் போஸ்ட் அமைத்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக குடியிருப்புவாசிகளிடம் கேட்டபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே இது போன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago