சென்னை: மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பு ஆற்றியதற்காக பசுமை விருதும் பசுமை முதன்மையாளர் விருதுகளையும் வழங்கினார்.
இதன்படி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.
மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயலாற்றி விருதுக்கு தேர்வான 79 பல்வேறு அமைப்புகளில், இராணிப்பேட்டை டேனரி எஃப்ளுயன்ட் டிரீட்மென்ட் கம்பெனி லிமிடெட், பெருந்துறை - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் - சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், நீலகிரி, கிளீன் குன்னூர் மற்றும் போரூர் - அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு பசுமை முதன்மையாளர் விருதுடன், பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago