பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் குறைந்த வட்டி பெற தமிழக அரசே காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு 14 சதவீதம். அதுவே, தமிழக அரசின் பங்களிப்பு 10 சதவீதம் மட்டுமே. இவ்வாறு 10 சதவீதம் மட்டுமே தமிழக அரசு பங்களிப்பாக கொடுப்பதால், மாநில அரசு ஊழியர்கள் 4 சதவீதம் கூடுதல் பங்களிப்பை இழக்கிறார்கள்.

தற்போது வட்டி விகிதம் 7.1 சதவீதம் என்று தமிழக நிதியமைச்சர் கூறுகிறார். ஊழியர் மற்றும் அரசின் பங்களிப்புகளை வேறெங்கோ வைப்பதற்குப் பதிலாக, பிஎஃப்ஆர்டிஏ-ல் டெபாசிட் செய்திருந்தால், தமிழக அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 10 சதவீதம் வட்டி விகிதத்தைப் பெற்றிருப்பார்கள். இப்போது ஊழியர்கள் ஆண்டுக்கு 2.9 சதவீதம் வட்டி குறைவாக பெறுவதற்கு, தமிழக அரசே காரணம்.

ஓய்வூதிய நிதியில் தற்போது இருக்கும் மொத்த தொகை ரூ.53,555 கோடி. தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையான பணத்தை மாநில அரசு தொடர்ந்து டெபாசிட் செய்யாததாலும், பிஎஃப்ஆர்டிஏ-ல் நிதியை டெபாசிட் செய்ய வேண்டாம் என முடிவு செய்துள்ளதாலும் மாநில ஓய்வூதிய நிதியின் வைப்பு தொடர்ச்சியாக சரிவை நோக்கிச் செல்லும் அபாயம் உள்ளது.

2022-23-ம் ஆண்டில் ஓய்வூதியங்களுக்கான செலவினம் மொத்த வருவாய் வரவுகளில் 17.07 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், இது தொடர்ந்தால் நாம் எதிர்பார்ப்பதைவிட வைப்பு நிதியின் சரிவு விரைவாக நடக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்