சென்னை: தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரியான சீனிவாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித் அவர் கூறியது: "13 வேட்பாளர்களிடமிருந்து 18 வேட்புத் தாள்கள் பெறப்பட்டது. சு.கல்யாணசுந்தரம், கிரிராஜன், ஆகியோர் திமுக சார்பாக தலா இரண்டு வேட்புமனு அளித்திருந்தார். சி.வி.சண்முகம் அதிமுக சார்பில் ஒரு வேட்புமனு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் 3 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அதிமுகவைச் சேர்ந்த ஆர்.தர்மர் ஒரு வேட்புமனுவையும், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் திமுக சார்பில் இரண்டு வேட்பு மனுக்களை அளித்திருந்தார். சுயேச்சைகள் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், கந்தசாமி, சுந்தரமூர்த்தி, தேவராஜன், பத்மராஜன், மன்மதன், வேல்முருகன் சோழகனார் தலா ஒரு மனு அளித்திருந்தனர்.
» IND vs PAK | கிரிக்கெட் போட்டி வேண்டும்; இரு அணி வீரர்கள் விருப்பம்: முகமது ரிஸ்வான்
» தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த 172 நிறுவனங்கள் மூடல்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்
இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் கடந்த 1.6.2022 அன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 6 வேட்பாளர்களின் 11 வேட்புமனுக்கள் செல்லத்தக்கதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்ட வேட்புமனுக்கள் அளித்த வேட்பாளர்கள் எவரும் தங்களது வேட்புமனுக்களை இன்று (ஜூன் 3) 3 மணிக்குள் திரும்பபெறவில்லை.
இந்த தேர்தலில் காலியிடங்களின் எண்ணிக்கை 6. போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் எண்ணிக்கை 6.இரண்டும் சமமாக உள்ளதால், 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 53/2- ன்படி, திமுகவைச் சேர்ந்த சு.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன், கே.ஆர்.என் ராஜேஸ்குமார், அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் ஆகியோர் போட்டியின்றி முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago