சிவகங்கை: காளையார்கோவில் அருகே தூய்மை பாரதத் திட்டத்தில் இலவச கழிப்பறைகள் கட்டியதில் முறைகேடு நடந்த விவகாரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இதன் மூலம் 8 அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம், மறவமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பால்குளத்தைச் சேர்ந்தவர் பாண்டிகண்ணன். இவர், அந்த ஊராட்சியில் தூய்மை பாரதத் திட்டத்தில் இலவச கழிப்பறை கட்டியது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தகவல் கேட்டிருந்தார்.
அதில், 2015 முதல் 2019-ம் ஆண்டு வரை மறவமங்கலம் ஊராட்சியில் பால்குளம், மறவமங்கலம், பூதகுடி, பளுவாகொடை ஆகிய கிராமங்களில் 403 கழிப்பறைகள் கட்டியதாக தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் 373 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டன என்பது தெரியவந்தது.
நூதன முறைகேடு
அதாவது ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி பெயரில் தனித்தனியாக கழிப்பறைகள் கட்ட அனுமதி கொடுத்து ஒரு கழிப்பறை மட்டும் கட்டப்பட்டது. அதேபோல் ஒரே குடும்பத்தில் உறவுமுறைகளை மாற்றி காண்பித்து 4 கழிப்பறைகள் கட்ட அனுமதித்து ஒரு கழிப்பறை மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
மேலும் வாடகை வீட்டில் குடியிருப்போர், இறந்தோர், திருமணமாகி வெளியூரில் வசிக்கும் பெண்கள் பெயரிலும் கழிப்பறைகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் 30 கழிப்பறைகள் வரை கட்டாமலேயே கட்டியதாகக் கணக்கு காட்டி பணம் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து பாண்டிகண்ணன் புகாரின்பேரில் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீஸார், கடந்த 2015 முதல் 2019 வரை பணியில் இருந்த 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மறவமங்கலம் ஊராட்சிச் செயலாளர் என மொத்தம் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒருவர் சஸ்பெண்ட்
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருவர் சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago