மோடி பிரதமரானவுடன் தீவிரவாதம் குறைந்தது: அண்ணாமலை தகவல்

By செய்திப்பிரிவு

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே வயலூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் காஷ்மீர் முதல் உலகப் பிரச்சினை வரை பிரதமர் கையாண்டு வருகிறார். மோடி பிரதமரானவுடன் தீவிரவாதம் குறைந்துள்ளது. நக்சல் பிரச்சினை உள்ள மாநிலங்களில் அதை முற்றிலும் ஒழித்து சாதனைபடைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ரவுடிகள் தைரியமாக நடமாடி அச்சமின்றி கொலை செய்வது அதிகரித்துள்ளது.

காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் கச்சத்தீவை தாரை வார்த்தன. பிறகு, அப்பகுதியில் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு இருக்கும் உரிமையை உறுதி செய்த ‘பிரிவு 6’-ஐ நீக்கினர். இப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். தமிழகத்துக்குத் தரவேண்டிய 9 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி பணம் முழுவதும் மத்திய அரசு கொடுத்துவிட்டது. அதேநேரம் மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்குமா? இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன், இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பி செல்வம் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்