நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாத 9 கட்டிடங்களின் மின் இணைப்பை துண்டிக்க கடிதம்: திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு நீண்டகாலமாக சொத்துவரி செலுத்தாத 9 கட்டிடங்களின் மின் இணைப்பை துண்டிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் நகராட்சி நிர்வாகம் கடிதம் அளித்துள்ளது.

திருவள்ளூர் நகராட்சி பகுதியில் 12,500 குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பல குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாளச் சாக்கடை கட்டணம் போன்ற வரி இனங்களை நிலுவையில் வைத்துள்ளன.

அவ்வாறு நிலுவையில் வைக்கப்பட்ட வரி இனங்களின் மொத்ததொகை கடந்த மே 31-ம் தேதிநிலவரப்படி, சுமார் ரூ.7.22 கோடியாக உள்ளது.

இதனால், பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை நீடிக்கிறது. ஆகவே, நிலுவையில் உள்ள வரி இனங்களை வசூலிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் சிவிஎன் சாலை, ஜெஎன் சாலை, அஹிம்சா சாலை பகுதிகளில் உள்ள 9 கட்டிடங்களின் உரிமையாளர்கள், நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் உள்ளனர்.

ஆகவே, அக்கட்டிடங்களின் மின் இணைப்பைத் துண்டிக்குமாறு, திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி கடந்த மே 31-ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் திருவள்ளூர் செயற்பொறியாளரிடம் கடிதம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்