திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ராஜா நகரத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்பு 107 பட்டியலின குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைகளை வழங்கியது. இதையடுத்து, இலவச வீட்டுமனைகள் பெற்றவர்களுக்கு, அவர்களுக்கான மனையை அளவீடு செய்து வழங்க, ராஜாநகரம் பகுதியில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால், நில அளவீடு செய்யும் பணியை பல முறை வருவாய்த் துறை தொடங்கியும், அது தடைப்பட்டு வந்தது. ஆகவே, இலவச வீட்டுமனைகளைப் பெற்றும் அதனை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர் பட்டியலின மக்கள். இதுதொடர்பாக மக்கள், அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடந்தும் பலனில்லாமல் இருந்து வந்தது.
திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் சாதிபாகுபாடு நிலவுவதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்கடந்த மாதம் 27-ம் தேதி திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ராஜாநகரத்தில் அரசு வழங்கிய இடத்தில் பட்டியலின மக்கள் ஒரு மாதத்துக்குள் வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்கவில்லை என்றால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியிருக்கும் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்தார்.
இந்நிலையில், ராஜாநகரத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகள் அளவீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இப்பணியை, திருத்தணி கோட்டாட்சியர் சத்யா தலைமையிலான வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர்.
இப்பணி, திருத்தணி ஏஎஸ்பி சாய்பிரணீத் தலைமையில்500-க்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்புடன் நடைபெற்றது.
மேலும், போலீஸாரைத் தாண்டி சர்வே பணிகளைத் தடுக்க முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
காலை முதல், மாலை வரை நீடித்த இலவச வீட்டுமனைகள் நிலஅளவீடு செய்யும் பணி நிறைவில், வருவாய்த் துறையினர், பயனாளிகளுக்கு மனையை ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago