குப்பைகளில் இருந்து பிரித்து தினமும் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்களிடம் வழங்கல்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெறப்படும் தரம் பிரிக்கப்படாத குப்பைகள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் பிரித்தெடுக்கப்பட்டு மக்காத உலர்க் கழிவுகள் மறுசுழற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசால் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு வார்டிலும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டி பொருட்களை பறிமுதல் செய்தும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களில் 3,020 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.12,44,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்க மாநகராட்சியால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளில் பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் குப்பைகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும் சுமார் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பண்டல்களாக கட்டப்பட்டு மறுசுழற்சியாளர்கள் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் ஆணையர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்