புதுச்சேரி: புதிய மதுபானத் தொழிற்சாலைகளுக்கு ஆளுநர் அனுமதி தரக் கூடாது என்று ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரியின் வருவாயை பெருக்குவதாகக் கூறி, சுமார் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறி விப்பை அரசின் கலால்துறையும் வெளியிட்டுள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், நகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் பிரான்ஸ் நாட்டு உதவியைப் பெற்று, சுகாதார குடிநீர் திட்டத்தை ஒரு புறம் அரசு மேற்கொண்டுள்ளது. மறுபுறம் நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி, புதுச்சேரி மாநிலத்தை பாலைவனமாக்கும் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இந்த முரண்பாடான கொள்கைகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும். இதனை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
4 ஏக்கரில் அமைக்கப்பட வேண்டும் என்பதால், புதிய மதுபான தொழிற்சாலைகள் அனைத்தும் கிராமப்புற பகுதிகளில்தான் அமையும். இதனால் விவசாய நிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவர்.
புதுச்சேரியில் 5 மதுபான உற்பத்தி தொழிற்சாலை, ஒரு பீர் தயாரிக்கும் தொழிற்சாலை தற்போது இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களில் 30 சதவீதம் மட்டுமே புதுச் சேரியில் விற்கப்படுகிறது. மற்ற70 சதவீத மதுபானங்கள் வெளிமாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் புதுச்சேரி அரசுக்கு, மதுபான தயாரிப்பு வரி மட்டுமே கிடைக்கிறது. மதுபானங்களின் விற்பனை கலால் வரிவேறு மாநிலங்களுக்கே செல்கிறது. இதே விதிகள்தான் புதியதொழிற்சாலைகளுக்கும் விதிக்கப்படும். எனவே வரி வருவாய் கிடைக்கும், வேலைவாய்ப்பு பெருகும் என்பது கண்துடைப்பு நாடகம்தான்.
புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு துணை நிலை ஆளுநர் அனுமதி வழங் கக்கூடாது. இதுகுறித்து அதிமுக சார்பில் பசுமை தீர்ப்பாயம், பிரதமரின் நீர்நிலைகளை பாதுகாக்கும் பிரிவு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் செய்ய உள்ளோம். மீறி மதுபான தொழிற்சாலைகளை கொண்டுவர முயற்சித்தால், கட்சித்தலைமை அனுமதிபெற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
5 மதுபான உற்பத்தி தொழிற்சாலை, ஒரு பீர் தயாரிக்கும் தொழிற்சாலை தற்போது இயங்கி வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago