மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை கவனித்து வரும் பொறியாளர் தம்பதியர்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை தலைமை தாங்கி கவனித்து வருகின்றனர் பொறியாளர் தம்பதியர். தம்பதியர்களில் கணவர் மதுரை ரயில் நிலைய பணிகளையும், மனைவி ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகளையும் கவனித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களை சுமார் 1800 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்வதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.

இதில் மதுரை ரயில் நிலைய பணிகள் 440 கோடி ரூபாய் செலவிலும், ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகள் 120 கோடி ரூபாய் செலவிலும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மற்றும் ராமேஸ்வர ரயில் நிலை மறுசீரமைப்பு பணிகளை பொறியாளர் தம்பதியர்களான நந்தகோபால் மற்றும் ரதி ஆகியோர் மேற்கொள்ள உள்ளனர்.

இருவரும் தென்னக ரயில்வேவில் துணை தலைமை பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவரும் அது குறித்து தெரிவித்துள்ளது, "மறுசீரமைப்பு திட்ட பணிகளை நாங்கள் தலைமையேற்று கவனிப்பதில் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறோம். இருவரும் ஒரே திட்டத்தில் வெவ்வேறு ரயில் நிலையங்களில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளனர்.

மதுரை ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 45000 பயணிகள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்