ராமேசுவரம் அருகே அரசு பள்ளியில் கழிப்பறை வசதி வேண்டும்: ஆட்சியரிடம் மாணவிகள் மனு

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமேசுவரம் ஏரக்காடு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி பெற்றோர், மாணவ, மாணவிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராமேசுவரம் ஏரக்காடு கிராமத் தில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.

இங்கு 200 மாணவ, மாணவி கள் பயின்று வருகின்றனர். 6 ஆசிரியர்கள் உள்ளனர். இப்பள்ளியில் 5 முதல் 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்று முதல் 4-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கும், ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் கழிப்பறை வசதியில்லை. அதனால், அவர்கள் திறந்தவெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளி மாணவ, மாணவிகள் சிலர், அவர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். தங்கள் பள்ளியில் போதிய கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறும்போது, பெண் குழந்தைகள் திறந்தவெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் பாதுகாப்பற்ற சூழ்நிலையும், சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. எனவே, அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் கழிப்பறை வசதிகள் தனித்தனியே ஏற்படுத்தித்தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்