காரைக்குடி: காவல்துறையினரிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பெரம்பலூர் மாவட்டம் சிறு வாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலை அறநிலையத் துறை அதிகாரிகள் சீரமைக்கவில்லை. அதனால் சீரமைக்கும் பணிக்காக கார்த்திகோபிநாத் வசூலித்த பணத்தை அதற்காக மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் தவறு நடந்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டியதுதான். தவறு செய்யாத கார்த்திகோபிநாத் கைதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மக்கள் போராட்டம் மூலம் அறநிலையத்துறையிடம் இருக்கும் கோயில்களை மீட் பதைத் தவிர இந்துக்களுக்கு வேறுவழியில்லை. ஜி ஸ்கொயர் பற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
முதல்வர் குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்.
நீட் தேர்வு குறித்து சட்டப் பேரவையில் இயற்றிய தீர்மானம் வெற்றுக் காகிதம். பிரதமருக்கு முன் ஸ்டாலின் பேசியது எல்லாம் பொய். கச்சத்தீவைப் பற்றி பேச தகுதி படைத்த கட்சி பாஜக மட்டுமே. காவல்துறையினரிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் செயல்படுவர், என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago