சென்னை மாநகராட்சி அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள மன்றக் கூடத்தில் நடைபெற்றது. இதில் பேசிய 73-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பேத்வளவன், "எனது வார்டுக்கு உட்பட்ட உதவி பொறியாளர்கள் முறையான ஒத்துழைப்பு வழங்குவதில்லை. 2 மாதங்களில் 4 பொறியாளர்கள் மாறிவிட்டனர்.

விதி மீறல் கட்டிங்களுக்கு நோட்டீஸ் அளிக்கிறார்கள். இது தொடர்பான விவரங்களை கேட்டால் தருதில்லை. ‘ஆணையர் சொல்லிவிட்டார்; அதனால் செய்கிறோம்’ என்று கூறுகிறார்கள். எனவே, அனைத்து அதிகாரிகளையும் மாற்ற வேண்டும். நாங்கள் கேட்கும் அதிகாரிகளை போட்டால் இன்னும் உதவியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும், பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் மேற்கொள்ளபடும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தங்களுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று கருத்து தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்