அனைவருக்கும் சமவாய்ப்பை நீட் வழங்கியுள்ளது: அண்ணாமலை கருத்து

By செய்திப்பிரிவு

நாமக்கல்: நாடு முழுவதும் அனைவருக்குமான சம வாய்ப்பை மத்திய அரசு நீட் தேர்வு மூலம் வழங்கியுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

நாமக்கல்லில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு தொடக்க விழா தனியார் பள்ளி சார்பில் நடைபெற்றது. பாஜக மாநில துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து அண்ணாமலை பேசியது: தமிழகத்தில் நிகழாண்டில் சாதனையாக 1.42 லட்சம் பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். நாடு முழுவதும் 18 லட்சம் பேர் எழுத உள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் கூடுதலாக நீட் தேர்வு எழுத உள்ளனர்.

தாய்மொழியில் நீட் தேர்வை எழுதலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து 34,300 பேர் இந்த ஆண்டு தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுத உள்ளனர்.

நீட் தேர்வு வந்த பிறகு நாடு முழுவதும் பின்தங்கிய மாணவ, மாணவியர் மருத்துவக் கல்வி பயின்றுவருகின்றனர். அனைவருக்குமான சம வாய்ப்பை மத்திய அரசு நீட் தேர்வு மூலம் வழங்கியுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்