மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அதிமுக எம்பிக்களான நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. அதனால் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாகும் 57 எம்பிக்கள் இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாநிலங்களவை எம்பி தேர்வாவதற்கும் 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி திமுக 4 இடங்களுக்கும், அதிமுக 2 இடங்களுக்கும் போட்டியிடலாம். இந்நிலையில் 18 எம்எல்ஏக்களை கொண்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸூக்கு ஒரு இடத்தை திமுக விட்டுக்கொடுத்துள்ளது.

திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் போட்டியிடுகின்றனர். அதிமுகவுக்கு 66 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜக, பாமக ஆதரவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலர் ஆர்.தர்மர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிடுமாறு ப.சிதம்பரத்துக்கு தேசிய தலைமை அறிவுறுத்திய நிலையில், சென்னையில் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். இதைத் தொடர்ந்து இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இவர், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த பதவிக்காலம் தற்போது முடிவடைகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்