பாரூர் ஏரியில் இருந்து விநாடிக்கு 70 கனஅடி தண்ணீர் திறப்பு: புளியம்பட்டி, பெனுகொண்டாபுரம் ஏரிகளுக்கு செல்லும் நீர்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: பாரூர் ஏரி நிரம்பிய நிலையில் ஏரியில் இருந்து விநாடிக்கு 70 கனஅடி தண்ணீர் கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் புளியம்பட்டி மற்றும் பெனுகொண்டாபுரம் ஏரிகளுக்கு செல்கிறது.

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், அணைகளில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றிலும் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர், தென்பெண்ணை ஆறு மூலம் நெடுங்கல் தடுப்பணை வழியாக சாத்தனூர் அணைக்கு செல்கிறது. தடுப்பணையில் இருந்து பாரூர் ஏரிக்கு செல்லும் தண்ணீர் கால்வாய்கள் வழியாக பாசனத்துக்கும், ஏரிகளிலும் நிரப்பப்படுகிறது. தொடர் நீர்வரத்தால் பாரூர் ஏரி நிரம்பியது.

இதையடுத்து, ஏரிக்கு வரும் 70 கனஅடி நீர் முழுவதும் கால்வாய்கள் வழியாக இணைப்பு ஏரிகளுக்கு செல்கிறது. தற்போது பாரூர் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் போச்சம்பள்ளி அருகே கோணணூர் ஏரி நிரம்பி, திருவயலூர் கால்வாய் வழியாக புளியம்பட்டி ஏரி மற்றும் சிறுகுட்டைகள் வழியாக பெனுகொண்டாபுரம் ஏரிக்கு செல்கிறது.

இதுதொடர்பாக பொதுப் பணித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பாரூர் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க பாசன விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், 2-ம் போக பாசனத்துக்கு தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால், தற்போது தான் அறுவடை பணிகள் முடிந்து வயல்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

எனவே, பாரூர் ஏரியின் உபரிநீரை சேமிக்கும் வகை யில், ஏரிக்கு வரும் நீர் முழுவதும் கால்வாயில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பெனுகொண்டாபுரம் ஏரிக்கு சென்று அங்கிருந்து பாம்பாறு அணைக்கு செல்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்