சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (மே 29) சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பாமகவின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களை சந்தித்து அவர்களுடைய வாழ்த்துகளைப் பெற வேண்டும் என முடிவு செய்தேன்.
இன்று தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவருடைய வாழ்த்துகளைப் பெற்றேன். இது மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு.இந்த சந்திப்பின்போது அரசியல் எதவும் பேசவில்லை. அவரும் மனதார வாழ்த்தினார்.தொடர்ந்து அனைத்து மூத்த தலைவர்களையும் சந்திக்கவிருக்கிறேன். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் தோறும் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்க உள்ளேன் என்று அவர் கூறினார்.
பின்னர், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துப் பெற்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago