வைகை கரை சாலையில் சைக்கிள் டிராக்: மதுரை மாநகராட்சியின் சிறப்பு ஏற்பாடு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: சைக்கிளிங் செல்வோர் வசதிக்காக வைகைக் கரை சாலையில் மதுரை மாநகராட்சி சார்பில் ‘சைக்கிள் டிராக்’ அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது

பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்களால் தற்போது கார், இருசக்கர வாகனங்களை முன்போல் தாராளமாக பயன்படுத்த முடியவில்லை. முன்போல் தற்போது ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேலைக்கு செல்வதற்கு பொதுபோக்குவரத்தை பயன்படுத்த முடியவில்லை. ஆட்டோக்கள் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. பொதுபோக்குவரத்து வாகனங்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. அதனால், வேலைக்கு செல்ல வேண்டிய இடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. அதனால், பெட்ரோல் செலவு குறைக்க, சுற்றுச்சூழல் காக்க, உடல்நலமாக சைக்கிள் உதவும் என்பதால் மதுரை மக்கள் பலர் தற்போது சைக்கிளில் செல்கின்றனர்.

தபால்காரர்கள், சிறு வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் மதுரையில் நிரந்தரமாக சைக்கிளில் செல்கிறார்கள். கரோனா காலத்திற்கு பிறகு இளைஞர்களும் தற்போது உடல் ஆரோக்கியதற்திற்காக தங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு செல்வதற்கும் அருகில் செல்வதற்கும் தற்போது சைக்கிகளை பயன்படுத்துவது ஒரு பழக்க வழக்கமாக மாற்றியுள்ளனர். அந்த வகையில் தற்போது மதுரை மாநகரில் ஏராளமான சைக்கிள் கிளப்புகள் உள்ளன. அவற்றில் 50க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்கள் தினமும் அதிகாலையில் ஒரு மணி நேரம் சைக்கிகள் ஏதாவது ஒரு சாலையில் செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை புறநகர் பகுதியில் உள்ள ஒரு பகுதியை இலக்காக வைத்து "சைக்கிளிங் டூர்" செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மதுரையில் சைக்கிள்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமானாலும் சாலைகளில் அவர்களுக்கான தனி டிராக் இல்லை. நடைபாதைகளிலேயே அவர்கள் ஓரமாக சைக்கிளிங் செல்கின்றனர். மேலும், அதிகாலை நடைபயிற்சி செல்வோர் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிளிங் செல்கின்றனர்.

அதனால், மதுரை மாநகராட்சி பரிசோதனை முயற்சியாக கடந்த 2 ஆண்டிற்கு முன் சுற்றுச்சுழல் பார்க்கில் சைக்கிளிங் டிராக் அமைக்க திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டது. அதற்குள் கரோனா தொற்று பரவியதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் மாநகராட்சி நிர்வாகம், சாலையில் ‘சைக்கிளிங் டிராக்’ அமைக்க ஏற்பாடு செய்துள்ளது. அதற்காக வைகை கரையில் புதிதாக ஸ்மார்ட் சிட்டி சாலையில் இரு புறமும் ‘சைக்களிங் டிராக்’அமைக்க முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வைகை கரை சாலை, தெப்பக்குளம் பகுதியில் முதற்கட்டமாக சைக்கிளிங் டிராக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மதுரை ஒரு பாரம்பரிய பழமையான நகராக கருதப்படுவதால் இந்த நகரில் சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா, மாட்டு வண்டிகளை கூட சாலையில் செல்வதை தடை செய்ய முடியாது.

அவர்கள் சாலைகளில் செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதனாலே, தற்போது சைக்கிளிங் டிராக் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்பிறகு மற்ற சாலைகளில் படிபடியாக சைக்கிளிங் டிராக் அமைக்கப்படும்.

மேலும், சுற்றுலாத்துறையுடன் இணைந்து மதுரையின் பாரம்பரிய பெருமைமிக்க இடங்களை கண்பதற்கான "ஹேரிட்டேஜ் வாக்" மற்றும் "ஹேரிட்டேஜ் சைக்கிளிங்" திட்டம் செயல்படுத்த ஆய்வு செய்யப்படும். வடக்கு மண்டலத்தில் உள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைப்பயிற்சிக்கான இடம், பொழுதுபோக்கு அம்சங்கள், சைக்கிள் பாதை ஆகியவற்றுடன் மக்கள் பயன்பாட்டிற்கு சிறந்த பொழுதுப்போக்கு இடங்களை மேம்படுத்திட திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்