புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் ரூ.65 லட்சம் பணம் இன்று பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வருமானவரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்கள் நிறுவனங்களின் துணையுடன் பணம் பதுக்கி வாக்காளர்களுக்கு வழங்குவதை தேர்தல்துறை மற்றும் வருமான வரித்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அதன் அடிப்படையில் புதுச்சேரியில் இன்று தியாகராஜர் வீதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ. 65 லட்சம் புதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறையினர் அந்தப் பணத்தை கைப்பற்றியுள்ளனர். இப்பணம் வாக்காளர்களுக்கு தர பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதுதொடர்பாக துணை மாவட்ட தேர்தல் அதிகாரி தில்லைவேல் கூறுகையில், "புதுச்சேரியில் பணம் பதுக்குவதை தடுக்க தீவிர கண்காணிப்பு நடக்கிறது. பணம் பதுக்குவோர் மீதும் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்பவர் மீதும், பணம் பெறும் வாக்காளர்கள் மீதும் தேர்தல் சட்டவிதிமுறைப்படி இந்திய தண்டனை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago