சென்னை: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஜூன் 13-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ம் தேதியும், 12-ம் வகுப்பிற்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்பிற்கு ஜூன் 27-ம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று சில நாட்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
மேலும் மாணவர்கள், இணையம் வாயிலாக அடுத்த ஆண்டு பள்ளி திறப்பு, காலாண்டு அரையாண்டு தேர்வு எப்போது என்பதை பார்த்துக்கொள்ள முடியும் என்றும், அதேபோல் விடுமுறை தினங்கள் எப்போது என்ற விவரங்களையும் அறிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 13-ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 2, 3, 4, 7, 8, 10 ஆகியவற்றுக்கும் ஜூன் 13-ஆம் தேதியே சேர்க்கை தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
» பாமக புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு: சிறப்பு பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறையின்போதே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago