தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றுபரவலை தடுக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா உள்ளிட்டமாநிலங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல், சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணாநகர், பெருங்குடி, கோடம்பாக்கம் பகுதிகளில் தொற்று சற்றுஅதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் பாதிப்பு அதிகரிக்கும் சூழலில், பெருந்தொற்று பரவாமல் தடுக்க வேண்டும். ஒரே பகுதியில் ஏற்படும் தொற்று மற்றும் குடும்ப தொற்று ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 93.74 சதவீதம் முதல் தவணையும், 82.55 சதவீதம் இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேநேரம், 18 வயதுக்கு மேற்பட்ட 43 லட்சம் பேர் முதல் தவணையும், 1.22 கோடி பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடவில்லை.

தகுதியான 13 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் போடவில்லை. அனைவரையும் தடுப்பூசிபோட வைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும். நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். தொற்று ஏற்பட்டவர்களுக்கு, வீடு மற்றும் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். பொது இடங்களில், மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். தொற்று தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 93.74 சதவீதம் முதல் தவணையும், 82.55 சதவீதம் இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேநேரம், 18 வயதுக்கு மேற்பட்ட 43 லட்சம் பேர் முதல் தவணையும், 1.22 கோடி பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்