கொடைக்கானலில் கொட்டிய மழையால் வெகுவாக குறைந்த வெப்பநிலை: காட்டாற்று வெள்ளத்தால் மலைகிராம மக்கள் தவிப்பு

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து இரவில் 12 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவுகிறது. காட்டாற்று வெள்ளத்தால் மலை கிராமமக்கள் ஆற்றைக் கடந்து செல்ல முடியாமல் தவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இந்த ஆண்டு கோடைமழை வழக்கத்தை விட அதிகம் பெய்து வருகிறது. கோடை மழை தொடங்கியது முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்துவருகிறது.

நேற்று முன்தினம் மாலையில் திடீரென இரண்டு மணிநேரம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் அருவி, காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பேத்துப்பாறை வ‌ய‌ல் ப‌குதியில் உள்ள பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் ஆற்றைக் கடந்து கிராமத்துக்குச் செல்ல முடியாமல் மலைக்கிராம மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். வெள்ளம் சற்றே குறைந்த பிறகு கயிறுகட்டி ஆற்றைக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர் மழையால் சுற்றுலாப் பயணிகளும் அடுத்தடுத்து சுற்றுலா தலங்களுக்குச் செல்ல முடியாமல் மழைக்கு ஒதுங்கினர்.

கொடைக்கானலில் நேற்றும் சாரல் மழை பெய்தது. தினமும் மலைப்பகுதிகளில் சிறிது நேரமாவது மழை பெய்வதால் மலையடிவாரத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொடைக்கானலில் 27 மி.மீ., மழை பதிவானது. கொடைக்கானலில் நேற்றும் சாரல் மழை பெய்தது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர் மழையால் மலைப்பகுதி எங்கும் பசுமையாகக் காணப்படுகிறது. இதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. மாலை நேரத்தில் மேகக் கூட்டங்கள் மோயர் பாய்ண்ட், கோக்கர்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா ஆகிய பகுதிகளில் தாழ்வாகச் செல்வதால் சுற்றுலாப் பயணிகளைத் தழுவிச் செல்கிறது.

தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பகலில் அதிகபட்சமாக 19 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக இரவில் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவுகிறது. இரவில் இதமான குளிர் காணப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்