கொலையான மீனவ பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: கே.பாலகிருஷ்ணன் மீனவ பெண்

By செய்திப்பிரிவு

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமேசுவரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண் ஒருவர் கடந்த 25-ம் தேதி, கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை மார்க்சிஸ்ட் மாநிலச் செயற்குழு கண்டிக்கிறது.

இக்கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இதுபோன்ற குற்றங்கள் நடப்பதற்கு போதை பழக்கமும் காரணமாக உள்ளது. போதைப் பொருள் விற்பனைத் தடையை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

இப்பிரச் னையில் முதல்வர் தனிக் கவனம் எடுத்து, இதுபோன்ற வன்முறையைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிடவும், தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்