மதுரை: திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் வி.செல்வி (அதிமுக), உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலில் நான் உட்பட அதிமுக சார்பில் போட்டியிட்ட 4 பேர் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டோம். ஒரு வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டவர் வெற்றிப் பெற்றார். பின்னர் நான் ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டேன்.
சுயேட்சை கவுன்சிலர் தற்போது திமுகவில் சேர்ந்துள்ளார். அவரது தூண்டுதலின் பேரில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி கவுன்சிலர்கள் ராமலெட்சுமி, செல்வம் ஆகியோர் திருச்செந்தூர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக விளக்கம் கேட்டு திருச்செந்தூர் கோட்டாட்சியர் 6.5.2022-ல் நோ்ட்டீஸ் அனுப்பினார். தமிழ்நாடு ஊராட்சி விதிப்படி மொத்தமுள்ள 5 கவுன்சிலர்களில் 3 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு புகார் கொடுத்தால் மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்க முடியும்.
» ராமேசுவரம் மீனவப் பெண் கூட்டுப் பாலியல் கொலை வழக்கு: வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது
» அரசு மருத்துவமனைகளில் 60% பேர் மட்டுமே மகப்பேறு சிகிச்சை பெறுகின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அவ்வாறு இல்லாமல் 2 கவுன்சிலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது சட்ட விரோதம். எனவே கோட்டாட்சியர் அனுப்பியுள்ள நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். அந்த நோட்டீஸ் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராஜா கார்த்திகேயன் வாதிட்டார். பின்னர் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸூக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago