அரசு உதவி பெறும் பள்ளி பணியாளர்களுக்கு நியமன ஒப்புதல் வழங்கவும்: தினகரன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளி பணியாளர்களை நியமிக்க ஒப்புதல் அளித்து உரிய ஊதியம் கிடைப்பதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (Government Aided Schools) பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் திமுக அரசு இழுத்தடித்து வருவது சரியானதல்ல.

இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு அதன்படி செயல்படாமல், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என காரணம் காட்டி காலம் தாழ்த்தி வருவதால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (Government Aided Schools) ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஊதியமின்றி செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, திமுக அரசு இந்தப் பணியிடங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து உரிய ஊதியம் அவர்களுக்கு கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்." என்று தினகரன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்