திருப்பூரில் பறிமுதல் செய்த ரூ.570 கோடி எண்ணும் பணி முடிந்தது: கோவை ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைப்பு

By இரா.கார்த்திகேயன், ம.சரவணன்

திருப்பூர் அருகே உரிய ஆவணங் கள் இல்லாததால் பறிமுதல் செய்யப் பட்ட ரூ.570 கோடி நேற்று கோவையில் உள்ள இந்திய ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் அருகே பெருமா நல்லூர்- குன்னத்தூர் தேசிய நெடுஞ் சாலையின் பாலத்தின் கீழ்ப் பகுதி யில் உள்ள இணைப்புச் சாலை யில், கடந்த 14-ம் தேதி அதிகாலை விசாகப்பட்டினத்துக்கு கொண்டு செல்வதாக கூறப்பட்டு, 3 கன்டெய்னர் லாரிகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, பணம் குறித்த மேல் விசாரணைக்காக வருமானவரித் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு, திருப்பூரில் இருந்து கோவைக்கு பணம் கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, திருப்பூர் ஆட்சியர் ச.ஜெயந்தி நேற்று முன் தினம் இரவு, பணத்தை விடுவிப்பது தொடர்பாக ஆட்சியர் அலுவ லகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதில், தேர்தல் பார்வையாளர்கள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், வங்கி அலுவலர் கள், காவல்துறை அதிகாரிகள், பணம் கைப்பற்றப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் என பலர் பங்கேற்றனர்.

பல மடங்கு பாதுகாப்பு

மத்திய ரிசர்வ் போலீஸார், 2 காவல் உதவி ஆணையர்கள், கவசம் அணிந்த ஆயுதப்படைக் காவலர்கள் மற்றும் ஆந்திர போலீஸாருடன் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.570 கோடி, நேற்று அதிகாலை 5.25 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அதிகாரிகளைத் தவிர ஆட்சியர் அலுவலகத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள எஸ்பிஐ மண்டல அலுவலகத்துக்கு காலை 6.45 மணிக்கு 3 கன்டெய்னர்களும் கொண்டு செல்லப்பட்டன. 1 மணி நேரம் 20 நிமிடம் இந்தப் பயணம் தொடர்ந்தது.

இனி என்னாகும்?

கோவைக்கு பணம் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரி கள் சிலர் கூறியதாவது: திருப்பூர் வருமானவரித் துறை துணை இயக் குநர் அருண், பணத்தைக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டார்.ரூ.570 கோடி என ஆவணத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. அவற்றை சரி பார்க்கும் பணியில், வருமானவரித் துறையினர் ஈடுபடுவார்கள். விசார ணை மற்றும் பாதுகாப்புக் காரணங் களைக் காட்டி, அடுத்தகட்டமாக திருப்பூரில் இருந்து கோவைக்கு பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றனர்.

திருப்பூர் ஆட்சியர் ச.ஜெயந்தி ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, ரூ.570 கோடி, வருமானவரித் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது’ என்றார்.

பணத்தை பறிமுதல் செய்தபோது உடன் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த அதிகாரிகள் கூறும்போது, ‘கோவை எஸ்பிஐயில் ரூ.570 கோடி பெற்றோம். அங்கேயே திரும்ப செலுத்தி விட்டோம்’ என்றனர்.

காலை 11 மணி

திருப்பூர் தேர்தல் பார்வையாளர் யஷ்பால், கோவை தேர்தல் பார்வை யாளர் ஜோதி கைலாஷ், வருமான வரித்துறை இணை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் முன்னி லையில் கோவையில், நேற்று காலை 11 மணியளவில் ஒவ்வொரு கன் டெய்னர் வாரியாக பணப் பெட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன.

பணத்தை வங்கி ஊழியர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னி லையில் எண்ணி கணக்கிட்டனர்.

‘ஒவ்வொரு கன்டெய்னர் லாரியில் இருந்து ‘சீல்’ பிரித்து பணத்தை எடுப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனதாகவும், ஒரு கன்டெய்னர் லாரி யில் உள்ள பணத்தை எண்ணுவதற்கு தலா 2 மணி நேரம் ஆனதாகவும்’ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலை 4 மணியளவில், 2 கன்டெய்னர் லாரியில் உள்ள பணம் எண்ணி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 3-வது கன்டெய்னர் லாரியில் உள்ள பணம் தொடர்ந்து எண்ணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நடந்தது எப்படி?

கோவை வங்கிப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

பொதுவாக ஒவ்வொரு மாவட்டம் வாரியாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணக் காப்பகம் இருக்கிறது. இந்த பணக் காப்பகத்தில் பணியாற்றுபவர்கள் பாரத ஸ்டேட் வங்கிப் பணியாளர்கள். ஆனால், பணக் காப்பகத்தில் எவ் வளவு பணம் வைத்திருக்க வேண் டும் என்ற விதிகளை வகுத்து கட்டுப் பாடுகளை மேற்கொள்வது ரிசர்வ் வங்கியின் முடிவைப் பொறுத்தது.

இதன்படி, அதிகமாக பணக் கையிருப்பு உள்ள தலைமை அலுவல கங்களில் இருந்து குறைவான அளவு பணக் கையிருப்பு கொண்ட தலைமை அலுவலகங்களுக்கு பணம் மாற்றப்படுவது வழக்கம்.

இதன்படி, கோவை தலைமை அலுவலகத்தில் ரூ.300 கோடி வரை கையிருப்பு இருந்தால் போதுமானது. இருப்பினும், பணக் காப்பகத்தில் சுமார் ரூ.800 கோடிக்கும் அதிகமான அளவு கையிருப்பு இருந்ததால் ரூ.570 கோடி பணத்தை விசாகப்பட்டினம் அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. இவ்வாறு பணம் கொண்டு போகும்போதுதான் திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பணக் காப்பக ஊழியர்கள்

கோவை தலைமை அலுவலகத் தில் பணக் காப்பகத்தில் சுமார் 10 பேர் பணியில் உள்ளனர். 3 கன்டெய்னரில் கொண்டு வரப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மூன்று கன்டெய்னரில் தலா 65 பெட்டிகள் இருந்துள்ளன. வங்கியின் முதல் தளத்தில் பலத்த பாதுகாப்புடன் பணம் எண்ணப்பட்டது.

கன்டெய்னரில் இருந்த பணத்தை எண்ணும் பணி ஆறரை மணி நேரமாக நடைபெற்றது. மாலை 5.45 மணியளவில் பணம் எண்ணி முடிக்கப்பட்டது. எவ்வளவு பணம் இருந்தது என்பது போன்ற விவரங்களை தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக, வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று இரவு தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்