சென்னை: பள்ளி ஆசிரியர்களை கற்பித்தல் பணிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சருக்கு ஆசிரியர்அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது
இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்வுக்குப்பின் பள்ளிகள் திறப்பு மற்றும், வரும் கல்வியாண்டில் 12-ம்வகுப்புக்கு மார்ச் 13-ல், 11-ம் வகுப்புக்கு மார்ச் 14-ல், 10-ம் வகுப்புக்குஏப்.3-ல் பொதுத்தேர்வு நடத்தப்படும்என்று முன்கூட்டியே அறிவிக்கப் பட்டுள்ளதை வரவேற்கிறேன்.
கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே பொதுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பது, மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆசிரியர்களுக்கு திட்டமிடல் எளிமையாக அமையும். ஆசிரியர்கள் வேலை நாட்கள் முழுவதும் பள்ளியில் இருந்தால் மட்டுமே கற்றல் - கற்பித்தல் பணிகளை மேம்படுத்துவது சாத்தியம்.
எனவே, மாணவர்களின் நலன்கருதி கற்பித்தல் பணியைத் தவிர மற்ற பணிகள் மற்றும் பயிற்சிகளுக்காக ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பள்ளிக்கல்வி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஏற்கெனவே கரோனா காலகட்டத்தில் மாணவர்களிடையே கல்வித்தொய்வு ஏற்பட்டது. எனவே, ஆசிரியர்கள் முழுமையாக மாணவர்களு டன் தொடர்பில் இருக்க வேண்டும். மேலும், எமிஸ் இணையதளத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ‘ஹெல்ப் டெஸ்க்’ உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago