சென்னை: வெளிச்சந்தைகளில் தக்காளி விலை உயர்வினைக் கட்டுபடுத்தும் நடவடிக்கையாக அரசு பண்ணைப் பசுமை கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க, தமிழக அரசு கூட்டுறவுத் துறையின் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளியின் வெளிச்சந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்நடவடிக்கை தொடரும். மேலும், தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மே 23-ம் தேதி வரை 18 மெட்ரிக் டன் தக்காளி ரூ.0.15 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
» அவசியமாகும் மருத்துவக் காப்பீடு: ஏன், எதற்கு, எப்படி?- விரிவான அலசல்
» ஸ்வீடன் | வீடியோ மெசேஜ் அனுப்பி 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்த Klarna ஸ்டார்ட்-அப் நிறுவனம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago