மதிமுகவில் 3 மாவட்ட செயலர் நீக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் முக்கியப் பதவி கொடுக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதிமுகவின் சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து 3 மாவட்ட செயலாளர்களும் கட்சி ஒழுங்குநடவடிக்கைக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. இந்நிலையில், 3 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒழுங்கு நடவடிக்கைக் குழு அளித்துள்ள பரிந்துரையின் பேரில், புலவர் சே.செவந்தியப்பன், ஆர்.எம். சண்முகசுந்தரம், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர்,மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சியில் அவர்கள் வகித்து வரும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்